யுகபாரதி - இமான் கெமிஸ்ட்ரி!

Bookmark and Share

யுகபாரதி - இமான் கெமிஸ்ட்ரி!

யுகபாரதி இப்போது முழு பார்முக்கு வந்து விட்டார். அடிக்கடி வெற்றிப் பாடல்கள் அபரிமிதமான படவாய்ப்புகள் என்று மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். எம். எஸ்.வி. -கண்ணதாசன், இளையராஜா- வைரமுத்து, யுவன்சங்கர்ராஜா- நா. முத்துக்குமார் கூட்டணி போல இமான் -யுகபாரதி கூட்டணி வெற்றிகரமான ஒன்றாகிவிட்டது.

அது எப்படி உங்களுக்குள் இப்படி ஒரு கெமிஸ்ட்ரி என்ற போது " இமானின் இசை ஆளுமை தனியானது. எங்கள் கூட்டணியில் முழுமையான வெற்றி கிடைப்பது மகிழ்ச்சி.

இமானுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. பாடலை வெற்றிகரமாக்க அவர் மெட்டு தரும் பாணி அலாதியானது. அவரது இசைக் கலவை பாணி முழு வணிக வீச்சுடன் இருக்கும். " என்றவரிடம் மெட்டுக்குப் பாட்டா பாட்டுக்கு மெட்டா என்ற போது மெட்டுக்குத்தான் பாட்டு. சில நேரம் பாட்டுக்கு மெட்டும் உண்டு. அவர்அப்போதே மெட்டுப் போட உடன் இருந்தே பாட்டு எழுதுகிறேன் .. என்றார்.

ஒரு கவிஞர் பல்லவிக்கு மெனக்கெடாமல் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று யாரோ பிரபலப்படுத்தியதை பல்லவியாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன் ?என்றால்.

சினிமாவில் ஜனரஞ்சகம்தான் முக்கியம் .பிரபலப்படுத்துவதுதான் முக்கியம், வெற்றியடைவதுதான் பார்க்கப்படுகிறது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என பாடலுக்கு முன்பு வருவது பல்லவி அல்ல. அது ஒரு வசனம்தான்.

அது ஜனரஞ்சகத்தன்மைக்காக, வெகுஜன ரசனைக்காக வைக்கப்பட்டது.அதற்கும் இமான் இசை கொடுத்துவிட்டார்..பாடலின் பல்லவி கத்தரிப்பூ தாவணி என்பதுதான். இது படம் பார்க்கும் போது புரியும் என்றார்.

யுகபாரதி இப்போது இமான் மட்டுமல்ல வித்யாசாகர், அனிருத், தமன், தரண் இசையிலும் எழுதி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு மட்டும் யுகபாரதி 24 பாடல்கள் எழுதியுள்ளார்.

இது வரை கட்டுரைத் தொகுப்பு.நூல்கள்11, கவிதை நூல்கள் 8ம் எழுதியுள்ள யுகபாரதி முனியாண்டி விலாஸ் நடைவண்டி நாட்கள் என்கிற இரு தொகுப்புகளை விரைவில் வெளியிட இருக்கிறார்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions