போட்டியாளர்களான டி.இமான்-அனிருத்!

Bookmark and Share

போட்டியாளர்களான டி.இமான்-அனிருத்!

கோடம்பாக்கத்தில் முன்னணியில் இருந்த ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர்ராஜா, விஜய்ஆண்டனி போன்ற சில இசையமைப்பாளர்கள் தற்போது பரபரப்பு குறைந்து காணப்படுகிறார்கள்.

இதற்கு காரணம், மைனாவுக்கு பிறகு மார்க்கெட்டை பிடித்த டி.இமானும், 3 படத்தில் என்ட்ரியான அனிருத்தும்தான். மேலும், இவர்கள் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வருவதால், தொடர்ச்சியாக மற்றவர்களை தங்கள் படங்களுக்கு இசையமைக்க வைத்து வந்த இயக்குனர்களே இப்போது இவர்கள் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.

விளைவு, மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் இவர்களுக்கிடையே திரைக்குப்பின்னால் பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்த போட்டியில் ஜி.வி.பிரகாசும் இருந்தபோதும், அவர் இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் நடிப்பதால் நேரடிப்போட்டியில் பெரிய அளவில் ஈடுபடவில்லை.

மேலும், இமான், அனிருத் இருவருமே மேல்தட்டு ஹீரோ, டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்றால், சம்பள விசயத்தில்கூட விட்டுக்கொடுத்து வாய்ப்பை கைப்பற்றி விடுகிறார்களாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions