ஹீரோவாகிறார் இமான் அண்ணாச்சி!

Bookmark and Share

ஹீரோவாகிறார் இமான் அண்ணாச்சி!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இமான் அண்ணாச்சி. நீர்ப்பறவை, பாகன், மரியான், ஜில்லா, கோலி சோடா, அது வேற இது வேற, என்ன சத்தம் இந்த நேரம், பூஜை என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள சில படங்களில் வடிவேலு சாயலில் நடித்தார்.

அதுகுறித்து அவரிடம் கேட்டபோது,

என்னை கவர்ந்த நடிகர் வடிவேலுதான். அதனால் அவரது சாயல் என் நடிப்பில் இருக்கத்தான் செய்யும். ஒரு நல்ல நடிகரை என் நடிப்பில் பிரதிபலிப்பதை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்று சொன்னார்.

அதோடு, வடிவேலு போன்று ஒரு காமெடியனாக வேண்டும். எனது காமெடி நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த காமெடியன் விருது பெற வேண்டும். இதுதான் எனது லட்சியம் என்றும் கூறி வரும் இமான் அண்ணாச்சிக்கும், இப்போது கதாநாயகனாகும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

அதனால், தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம், எனக்கு பொருத்தமான காமெடி கதை இருந்தால் சொல்லுங்கள். ஹீரோவாக நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார்.

ஆக, கவுண்டமணி, வடிவேலு, விவேக், கருணாஸ், சந்தானம் வரிசையில் இன்னொரு காமெடியன் இமான் அண்ணாச்சியும் ஹீரோ பட்டியலில் சேரப்போகிறார். 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions