பேய் படத்தில் இமான் அண்ணாச்சி!

Bookmark and Share

பேய் படத்தில் இமான் அண்ணாச்சி!

சிவகார்த்திகேயனுடன் நடித்த காக்கி சட்டை படத்திற்கு பிறகு சுமார் 10 படங்கள் வரை நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி. இதில் புலி படம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த படத்தில் சந்தானம், சூரி போன்ற மெகா காமெடியன்கள் யாரும் இல்லாததால் இமான் அண்ணாச்சி, தம்பி ராமைய்யா ஆகியோரை முன்னிறுத்திதான் காமெடி காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதனால், புலி தன்னை இன்னும் பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் இமான் அண்ணாச்சி, மின்னல் மோகினி என்றொரு படத்திலும் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதாவது, நடிகை குஷ்பூவின் தம்பி அப்துல்லாதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இமான் அண்ணாச்சி துணி வியாபாரம் செய்பவராக வருகிறார். அவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில், மோகினி பேய் ஒன்று அப்துல்லாவை பிடித்து விட, அவர் இமான் அண்ணாச்சியை துரத்த படம் முழுக்க ஒரே ரகளைதானாம். அந்த வகையில், அப்துல்லாவை விட இமான் அண்ணாச்சிக்குத்தான் அதிகப்படியான காட்சிகளும் உள்ளதாம்.

இதனால் தற்போது தான் நடித்து வரும் படங்களில் இந்த மின்னல் மோகினி படத்தையும் பெரிதாக எதிர்பார்க்கிறாராம் இமான் அண்ணாச்சி.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions