சின்னத்திரையை என்றும் மறக்க மாட்டேன்- இமான் அண்ணாச்சி

Bookmark and Share

சின்னத்திரையை என்றும் மறக்க மாட்டேன்- இமான் அண்ணாச்சி

சின்னத்திரையில் குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. அவர் அந்த நிகழ்ச்சிகளில் பேசும் நெல்லை தமிழே அவருக்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டது. 

அந்த வகையில், தற்போது கைநிறைய படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி. ஆனபோதும் அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை விடவில்லை. தொடர்ந்து சினிமா-சின்னத்திரை என இரண்டு குதிரையில் சவாரி செய்து கொண்டிருக்கிறார்.

இதுபற்றி இமான் அண்ணாச்சி கூறும்போது, என்னை முதலில் மக்களிடம் கொண்டு சென்றது சின்னத்திரைதான். ஆரம்பத்தில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய எனக்கு சொல்லுங்கண்ணே சொல்லுங்க பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. 

அதற்கடுத்து குட்டி சுட்டீஸ். இந்த நிகழ்ச்சிதான் என்னை சின்னத்திரையின் சூப்பர் ஸ்டாராக்கியது. எந்த வீட்டு குழந்தைகளைக் கேட்டாலும் அண்ணாச்சி என்று சொல்லும் அளவுக்கு என்னை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது.அப்படி புகழ் பெற்ற பிறகுதான் சினிமா வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. 

இப்போது பல படங்களில் நடிக்கிறேன். ஆனபோதும், சின்னத்திரையை என்னால் விட முடியவில்லை. முக்கியமாக, குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் மழலைகளுடன் பேசுவது எனக்கு ஆனந்தமாக உள்ளது. அதிலும் இந்த காலத்து பிள்ளைகள் சின்ன வயதிலேயே ரொம்ப அறிவுப்பூர்வமாக இருக்கிறார்கள். 

அது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது. அதனால் குழந்தைகளுடன் பேச வேண்டும் என்பதற்காகவே அந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறேன்.இப்படி சொல்லும் இமான் அண்ணாச்சியிடம், டிவி சீரியல்களில் நடிப்பீர்களா? என்று கேட்டால், இப்போதைக்கு சினிமாவில் நடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. 

அதனால் சினிமாவில் மேலும் வளர வேண்டும என்ற ஆசை மட்டுமே உள்ளது. அதேசமயம், இப்போது தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைப்போன்று எதிர்காலத்தில் இன்னும் ஏதேனும் வித்தியாசமான புதுமையான நிகழ்ச்சிகள் கிடைத்தால் தொகுத்து வழங்குவேன்.

அந்த வகையில் சினிமாவில் நடிகராகவும், சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் இருக்கவே ஆசைப்படுகிறேன். சினிமாவில் வளர்ந்து விட்டேன் என்பதற்காக சின்னத்திரையை ஒருநாளும் மறக்க மாட்டேன் என்கிறார்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions