பிரபு சாலமனுக்கு சிறப்பு பரிசளித்த இசையமைப்பாளர் இமான்

Bookmark and Share

பிரபு சாலமனுக்கு சிறப்பு பரிசளித்த இசையமைப்பாளர் இமான்

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இமான் இசை அதிகம் பேசப்பட்டது. மேலும் இப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது.

கயல் படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் நாயகனாக தனுஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு இமான்தான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்திற்கு இசையமைக்கும் பணியை நல்ல நாளில் தொடங்க வேண்டும் என்று காத்திருந்த இமான், பிரபு சாலமனின் பிறந்த நாளான இன்று இசையமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

மேலும் இந்த பாடலை பிரபு சாலமனுக்கு பரிசாக அளிக்க இருப்பதாகவும் கூறி தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் இமான். 


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
கும்கி-2வில் நடிக்கும் ஹீரோயின் இவரா? பிரபல நடிகரின் மகள் அறிமுகம்
பாலைவனத்தில் உதயநிதியை இயக்க தயாராகும் பிரபு சாலமன்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை!
தொடரி தோல்வியால் பிரபுசாலமன் எடுத்த அதிரடி முடிவு!
தனுஷ் பட தலைப்பை தேடும் பிரபுசாலமன்!
படப்பிடிப்பில் யாரிடமும் டென்சன் காட்டாத பிரபுசாலமன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions