இமான் பாடலை வெளியிடும் டி.ஆர்

Bookmark and Share

இமான் பாடலை வெளியிடும் டி.ஆர்

ஜீவா-ஹன்சிகா-சிபிராஜ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

இவருடைய இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற காதலர் தினத்தன்று வெளியிடவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும், ‘அத்துவுட்டா அத்துவுட்டா’ என்ற சிங்கிள் பாடலை மட்டும் இன்று வெளியிடவுள்ளனர்.

இந்த பாடலை இன்று மாலை நடைபெறும் விழாவில் டி.ராஜேந்தர் வெளியிடவுள்ளார். ஏற்கெனவே, ‘டண்டணக்கா டண்டணக்கா’ என்ற பாடல் மூலம் டி.ஆருடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர் டி.இமான், தற்போது அவருடைய இசையில் உருவான ஒரு பாடலை டி.ஆர். வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

‘போக்கிரி ராஜா’ டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த பாடலும் ரசிகர்கள் பெரிதும் கவரும் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். 

ராம்பிரகாஷ் ராயப்பா ஏற்கெனவே ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தை இயக்கியவர். அதுமட்டுமில்லாமல், இப்படம் ஜீவாவுக்கு 25-வது படமாகும். ஜீவா-ஹன்சிகா இணையும் முதல் படம் இது. சிபிராஜ் இப்படத்தில் ஒரு வில்லனாக நடித்துள்ளார்.

இவ்வளவு சிறப்பம்சம்ங்களுடன் உருவாகியுள்ள ‘போக்கிரி ராஜா’ பிப்ரவரி 26-ந் தேதி வெளியாகிறது.


Post your comment





Related News
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்
லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன்: டி.ஆர்.
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions