இன்று அரையிறுதிப் போட்டி... திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா...?

Bookmark and Share

இன்று அரையிறுதிப் போட்டி... திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா...?

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் பங்கு பெறும் 2015ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்கே இன்று பலர் ஆர்வமாக இருப்பார்கள்.

னாலும் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதற்கு இடையில்தான் அலுவலக வேலையையும் பார்ப்பார்கள். அப்படியிருக்க இன்று திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இன்றைய கிரிக்கெட் போட்டியால் காலை காட்சியும், மதியக் காட்சியும் கண்டிப்பாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமானதிலிருந்து இந்தியா விளையாடும் போட்டிகள் நடக்கும் தினங்களில் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராத நிலையே இருந்தது.

இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டி மிக முக்கியமானதாகவும், அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரானதாகவும் இருப்பதால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை கூட ஏற்படலாம் என்கிறார்கள்.

இந்த கிரிக்கெட் சீசன் முடிந்தால்தான் சம்மர் சீசன் ஆரம்பமானதும் சினிமா சீசன் ஆரம்பமாகும் என திரையுலக வட்டாரமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ற விதத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வரக் காத்திருக்கிறது என்கிறார்கள்.

சினிமாவுக்கு எத்தனையெத்தனை ரூபத்தில்தான் தடைகள் வருகிறது....!

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions