கிரிக்கெட்டால் பாதிக்கப்படும் வசூல்...?

Bookmark and Share

கிரிக்கெட்டால் பாதிக்கப்படும் வசூல்...?

உலகக் கோப்பை கிரிக்கெட் மேட்ச் மும்முரமாக நடந்து வருவதால் கடந்த இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திரைப்படங்களுக்கான வசூல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிறு இந்திய - தென்னாப்பிரிக்கா, அதற்கு முந்தைய ஞாயிறு இந்திய - பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றன. இரண்டுமே முக்கியமான ஆட்டங்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டமே இல்லையாம்.

சில ஊர்களில் காட்சிகளை ரத்து செய்யுமளவிற்குக் கூட நிலைமை இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். பெரிய படங்களாகவாவது இருந்தால் பரவாயில்லை, அவர்களின் ரசிகர்கள் எப்படியும் படம் பார்க்க வந்துவிடுவார்கள்.

இந்த மாதம் பல சிறிய படங்கள் வெளிவந்திருப்பதால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். தற்போது லீக் சுற்று போட்டிகளில் நடந்து வருகின்றன. அடுத்தமாதம் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்திய அணியும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அடுத்த மாதம் வெளிவரும் படங்களுக்கும் பாதிப்பாக அமையலாம் என்கிறார்கள். இந்திய அணிக்கு அடுத்து, பிப்ரவரி 28, மார்ச் 6, 10, 14 ஆகிய தேதிகள் போட்டிகளில் உள்ளன.

காலிறுதிப் போட்டிகள் மார்ச் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளிலும், அரை இறுதிப் போட்டிகள் மார்ச்  24, 26 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி மார்ச் 29ம் தேதியும் நடக்க உள்ளன.

இந்திய அணி ஒரு வேளை ஒவ்வொரு கட்டமாக கடக்கும் போது மார்ச் மாதம் வெளிவரும் படங்களின் வசூலும் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் “எனக்குள் ஒருவன், சேர்ந்து போலாமா, ரொம்ப நல்லவன்டா நீ, வானவில் வாழ்க்கை, இடம் பொருள் ஏவல், கொம்பன், வாலு” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றைத் தவிர மேலும் சில படங்கள் வெளி வரவும் வாய்ப்புள்ளது.

இப்போதெல்லாம் ஒரு படத்தைத் தயாரிப்பது கூட பெரிய விஷயமல்ல, அதை சரியான நேரத்தில் வெளியிடுவதுதான் பெரிய விஷயமாக உள்ளது. கிரிக்கெட்டி போட்டிகள் ஒரு பக்கம், பரீட்சைகள் மறுபக்கம் என வெளிவரும் படங்களுக்கும் ஒரு சோதனையான காலம் இது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions