'இந்தியா பாகிஸ்தான்' முதல் நாள் ஸ்கோர் எவ்வளவு ?

Bookmark and Share

'இந்தியா பாகிஸ்தான்' முதல் நாள் ஸ்கோர் எவ்வளவு ?

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்து அவர் நாயகனாக நடித்து 'சலீம்' படமும் வெற்றி பெற்று இரண்டு படங்களிலும் நல்ல வசூலை அள்ளினார்.

இந்த இரண்டு படங்களும் பரப்பான த்ரில்லர் படமாக இருக்கவே ரசிகர்களையும் கவர்ந்தது. இப்போது தன்னுடைய மூன்றாவது படமான 'இந்தியா பாகிஸ்தான்' படத்தை ஒரு நகைச்சுவைப் படமாகக் கொடுத்திருக்கிறார்.

நேற்று வெளியான இந்தப் படம் ஒரு 20 - 20 மேட்ச் போல தொடர்ச்சியாக பரபரப்பாக இல்லாமல் ஒரு 50 ஓவர் மேட்ச் போல கடைசி கட்டத்தில் அதிக பரபரப்பாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதல் இரண்டு படங்களையும் 'போல்டு' ஆக விக்கெட் எடுத்து வசூலை அள்ளிய விஜய் ஆண்டனி, இந்த மூன்றாவது படத்தை 'எல்பிடபிள்யூ' வாகத்தான் எடுத்திருக்கிறார்.

விக்கெட்டுக் அந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளி பால் சென்று விட்டது. இருந்தாலும் விக்கெட், விக்கெட்தான். இதையும் 'போல்டு' ஆக எடுத்திருந்தால் இன்னும் நல்ல வசூல் இருந்திருக்கும் என்கிறார்கள்.

இப்போது மட்டும் குறையில்லை, படத்தின் நீளம் 157 நிமிடமாக இருப்பதை ஒரு 140 நிமிடமாகக் குறைத்தால் படத்தை இன்னும் வெகுவாக ரசிக்கலாம் என்கிறார்கள் விமர்சகர்கள். இவர்களின் குரலைக் கேட்டு விஜய் ஆண்டனி விழித்துக் கொள்வாரா...?


Post your comment





Related News
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions