இந்தியா பாகிஸ்தான் டிரைலர் ஒரு பார்வை

Bookmark and Share

இந்தியா பாகிஸ்தான் டிரைலர் ஒரு பார்வை

சலீம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் படம், 'இந்தியா பாகிஸ்தான்'. என்.ஆனந்த் இயக்குகிறார், தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். ஓம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

அது பற்றிய ஒரு பார்வை... இதற்கு முந்தைய படங்களில் அதிகம் பேசாமல் நடித்தார் விஜய் ஆண்டனி. இந்தப்படம் அவர் நிறைய பேசும் காமெடி படம் என்பதால் "பார்க்க ரொம்ப பழமா இருக்க சத்தமா பேசுவியா?" என்று நண்டு ஜெகன் கேட்க "பேசுவேன்" என்று விஜய் ஆண்டனி பதில் அளிப்பதோடு டிரைலர் தொடங்குகிறது.

"மார்க்கெட்டுல மீன் விற்கிறவன் மாதிரி இருக்க. உன்னை மார்க்கெட்டிங் மானேஜர்னு சொல்லும்போதே நான் உஷாராயிருக்கணும்" என்று ஹீரோயின் சுஷ்மா ராஜ் சொல்ல, "உன்னை சாப்ட்வேர் என்ஜினீயர் சொல்லும்போது நான் உஷாயிருக்கணும்" என்கிறார் விஜய் ஆண்டனி.

ஆக பொருத்தமில்லாத இருவருக்கு திருமணம் நடந்து விட அதனால் அவர்களுக்குள் வரும் ஈகோ பிரச்சினையை காமெடியாக சொல்லப்போகிற படம் என்பது தெளிவாகிறது.

இதில் ஒருவர் இந்தியா, இன்னொருவர் பாகிஸ்தான்.கேரக்டர் பெயர்கள் அறிமுகப்படுத்துப்படுகிறது. அட்டம்ட் கார்த்திக் (விஜய் ஆண்டனி), மெரிட் மெல்லினா (சுஷ்மாராஜ்), காட்டுப்பய காத்தமுத்து (பசுபதி), சாமிபுள்ள மருது (எம்.எஸ்.பாஸ்கர்), தாஸ் என்கிற பாவாடை (ஜெகன்).

படத்தில் டாஸ்மாக் காட்சிகள் நிறைய இருக்கிறது. இரண்டு நிமிட டிரைலரிலேயே இரண்டு காட்சிகள் வருகிறது. அதில் ஒரு காட்சியில் "சொந்த காசுல எப்போ குடிப்ப?" என்று ஜெகன் கேட்கிறார்.

"சொந்த காசுல குடிச்சு பழகிட்டா எப்பல்லாம் கையில காசிருக்கோ அப்பல்லாம் குடிக்க தோணும்" என்று விளக்கம் கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. இதுதவிர பொள்ளாச்சி பசுமை பேக்டிராப்பில் ஒரு பாடல் காட்சி, ஸ்டைலிஷாக படமாக்கப்பட்ட வெளிநாட்டு பாடல் காட்சி.

கிராபிக்சில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் போல விஜய் ஆண்டனி நடந்து வரும் காட்சி போன்றவையும் இடம் பெற்றுள்ளது. கலகலப்பான காமெடி படம் என்பதை டிரைலர் உணர்த்துகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions