கமலின் இந்தியன் 2–ம் பாகம் தயாராகிறது

Bookmark and Share

கமலின் இந்தியன் 2–ம் பாகம் தயாராகிறது

கமல் இருவேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘இந்தியன்’. 1996–ல் இப்படம் வந்தது. நாயகியாக மனிஷா கொய்ராலா நடித்து இருந்தார். ஷங்கர் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். 

இப்படத்தில் இடம் பெற்ற 'பச்சைகிளிகள் தோளோடு‘, ‘டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா’, ‘கப்பலேறி போயாச்சு’, ‘மாயா மச்சந்திரா’, ‘அக்கடானு நாங்க’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின. 

‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இதில் ஈடுபட்டு உள்ளார். இதற்கான கதையை டைரக்டர் ஷங்கர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் ஏ.எம்.ரத்னமும், ஷங்கரும் சந்தித்து பேசி இந்த படம் குறித்து இறுதி செய்துள்ளனர். ஷங்கர் தற்போது ‘எந்திரன்’ 2–ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதில் ரஜினியை நாயகனாகவும், கமலை வில்லனாகவும் நடிக்க வைக்க விரும்பினார். கமல் ஏற்கவில்லை. இதையடுத்து வில்லன் கேரக்டருக்கு இந்தி நடிகர் ஷாருக்கானை தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தோடு ‘இந்தியன்’ 2–ம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியிலும் அவரது உதவி இயக்குனர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions