இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்

Bookmark and Share

இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்

‘இந்தியன் 2’ படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. `பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் `இந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.

`இந்தியன் தாத்தா’ கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாள்கள் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று `இந்தியன் 2’ படப்பிடிப்புக்கான லொகே‌ஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ‌ஷங்கர்.

கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். நயன்தாரா, கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், `கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்‘ என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.


Post your comment

Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions