இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்

Bookmark and Share

இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். நிழச்சியை தொகுத்து வழங்க தன்னை அணுகியவுடன் இதற்கு ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று மாதங்கள் நடக்கும். அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் கதையும் நடப்பு அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதை தான். கமல் ஒரு பக்கம் தீவிர அரசியலையும் இன்னொரு பக்கம் மீடியா பணியையும் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

தேர்தலில் அறிவித்து போட்டியிடும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திட்டமிட்டு இருக்கிறார். தன்னுடைய எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்ல இதுதான் சரியான வழி என்பதே கமலின் கணக்காக உள்ளது. 


Post your comment





Related News
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
இந்தியன்-2 படத்திற்காக கெட்டப்பை மாற்றிய கமல் - வைரலாகும் புகைப்படம்.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இந்தியன் 2 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ முதல் அப்டேட் இதோ
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் - ஷங்கரின் பலே திட்டம்.!
கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !
இந்தியன்-2 படத்தில் மெகா ஹிட் நாயகி - மாஸ் காட்டும் ஷங்கர்.!
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions