
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடிக்க, ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இன்று நேற்று நாளை'. இப்படத்தின் டிசைனும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டரில் குறிப்பிட்டுள்ள ''டைம் மிஷின் இருந்தால் காந்தி தாத்தாவ மட்டும் இல்ல நம்ம தாத்தாவோட கல்யாணத்தையே நேர்ல பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டிருப்பதும் இது ஒரு ஃபேன்டஸி படம் என்பதைப் புரிய வைத்து விடும்.
அது மட்டுமல்ல 'இன்று' என்பதற்கு 'பிளே' பட்டனையும், 'நேற்று' என்பதற்கு 'ரீவைன்ட்' பட்டனையும், 'நாளை' என்பதற்கு 'ஃபார்வேர்ட்' பட்டனையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதை விட ஒரு படத்தின் கதையைத் தெளிவாகப் புரிய வைக்க முடியாது. அதே சமயம், போஸ்டரில் காந்தி வேடத்தில் இருக்கும் ஒருவருடன் படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலும், கருணாகரனும் செல்ஃபி எடுத்துக் கொள்வது போன்ற டிசைனையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
டிசைனிலியே பரபரப்பை ஏற்படுத்த முயல்பவர்கள் படத்திலும் அந்த பரபரப்பை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். இதே போன்ற டைம் மிஷின் கதை ஒன்று பாலகிருஷ்ணா, மோகினி நடிக்க, சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் தெலுங்கில் 'ஆதித்யா 369' என்ற பெயரில் வெளியானது.
இந்தப் படம் 'அபூர்வ சக்தி 369' என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் ஆகி வந்தது. அந்தக் கதையைக் காப்பி அடிக்காமல் புதிய கதையுடன் 'இன்று நேற்று நாளை' படத்தைக் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக...!
Post your comment