இன்று நேற்று நாளை டைம் மிஷின் கதை

Bookmark and Share

இன்று நேற்று நாளை டைம் மிஷின் கதை

விஷ்ணு, , மியா ஜார்ஜ். கருணாகரன் நடிக்கும் படம் இன்று நேற்று நாளை. புதுமுகம் ரவிகுமார் இயக்குகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார்.

இது ஹாலிவுட்டில் வெளிவரும் டைம் மிஷின் பற்றிய கதை. அதாவது டைம் மிஷினில் பயணம் செய்து கடந்த காலத்திற்-கோ நிகழ்காலத்திற்கோ செல்லலாம். படத்தின் ஹீரோ விஷ்ணு, யாருமே செய்யாத ஒரு புதுவேலையை செய்து பெயர் வாங்கணும்னு நினைக்கிறவர். கருணாகரன் புலிவெட்டி சித்தர் ஜோதிட நிலையம் நடத்தும் போ ஜோதிடர்.

இருவருமே நண்பர்கள். ஒரு நாள் அவர்களுக்கு டைம் மிஷின் கிடைக்கிறது. அதில் ஏறி அவர்கள் சுதந்திர போராட்ட காலத்துக்கு சென்று மகாத்மா காந்தியை சந்திக்கிறார்கள்.

போகும்போது இப்போதுள்ள செல்போன், லேப்டாப், கம்யூட்டரை எடுத்துச் சென்று அவர்கள் நடத்தும் கலாட்டாக்கள்தான் கதை. ஒரு கட்டத்தில் மன்னர் காலத்துக்குள்ளும் செல்கிறார்கள்.

இன்றைய பரபரப்பு வாழ்க்கையையும் அன்றைய இயற்கை சார்ந்த அமைதியான வாழ்க்கையும் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து. திரும்பி வந்தபிறகு தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பது படத்தின் முடிவு.

இதில் டைம் மிஷினை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக ஆர்யா சிறப்புத்  தோற்றத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் ஆர்யா?
வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை: 2-ம் பாகம் எடுக்க முடிவு
ரசிகர்களை கவர்ந்தது இன்று நேற்று நாளை!
கடைசி நேரத்தில் கைமாறிய இன்று நேற்று நாளை
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்
காந்திக்கும் செல்ஃபியா ?
விஷ்ணுவுக்காக கதை கேட்காமல் நடித்த ஆர்யா
சமுத்திரக்கனி நடிக்கும் \'பெட்டிக்கடை இன்று விடுமுறை\'
முக்காலத்தையும் சொல்லும் இன்று நேற்று நாளை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions