ரசிகர்களை கவர்ந்தது இன்று நேற்று நாளை!

Bookmark and Share

ரசிகர்களை கவர்ந்தது இன்று நேற்று நாளை!

இந்தவாரம், விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று நேற்று நாளை, ஆதியின் நடிப்பில் யாகாவாராயினும் நா காக்க, விமல் நடிப்பில் காவல், கருணாஸ் நடிப்பில் லொடுக்கு பாண்டி, எஸ்.பி.சரண் தயாரிப்பில், மூணே மூணு வார்த்தை உள்ளிட்ட ஐந்து படங்கள் வௌியாகியுள்ளது. இந்த ஐந்து படங்களில் விஷ்ணு விஷால் நடிப்பில் வௌியாகியிருக்கும்  இன்று நேற்று நாளை படத்திற்கு தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில், விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இன்று நேற்று நாளை படம், டைம் மிஷனை மையமாக வைத்து வௌிவந்துள்ளது.

விஷ்ணு, கருணாகரன் கையில் டைம் மிஷின் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை காமெடியாகவும், கலர்புல்லாகவும், மினிமம் பட்ஜெட்டில் அசத்தலாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

காதல் படங்களையும், பேய் படங்களையும், காமெடி மற்றும் ஆக்ஷ்ன் படங்களை மட்டுமே பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப்படம் ஒரு வித புதிய அனுபவத்தை தந்துள்ளது. இதனால் இன்று நேற்று நாளை படத்தை ரசிகர்கள் ஏற்று கொண்டுள்ளனர்.

வித்தியாசமான படங்களை பார்த்து பார்த்து தயாரித்து வரும் சிவி குமாருக்கு நிச்சயம் இந்த இன்று நேற்று நாளை படம் ஒரு கமர்ஷியல் ஹிட் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் ஆர்யா?
வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை: 2-ம் பாகம் எடுக்க முடிவு
கடைசி நேரத்தில் கைமாறிய இன்று நேற்று நாளை
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்
காந்திக்கும் செல்ஃபியா ?
விஷ்ணுவுக்காக கதை கேட்காமல் நடித்த ஆர்யா
இன்று நேற்று நாளை டைம் மிஷின் கதை
சமுத்திரக்கனி நடிக்கும் \'பெட்டிக்கடை இன்று விடுமுறை\'
முக்காலத்தையும் சொல்லும் இன்று நேற்று நாளை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions