கடைசி நேரத்தில் கைமாறிய இன்று நேற்று நாளை

Bookmark and Share

கடைசி நேரத்தில் கைமாறிய இன்று நேற்று நாளை

மெட்ராஸ் டாக்கீஸ், திருப்பதி பிரதர்ஸ் போன்ற மற்ற பட நிறுவனங்கள் தயாரித்த படங்களை வாங்கி தமிழகம் முழுக்க விநியோகம் செய்து வருகிறார்  ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா. ஆனால் தான் தயாரித்த படத்தை வேறு ஒருவரிடம் விற்று தமிழகத்தில் வெளியிட வைத்திருக்கிறார்.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் புரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். கே.ஈ.ஞானவேல் ராஜாவின் இந்த செயலுக்குப் பின்னால் வலுவான காரணம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமியிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர் ரவிக்குமார். இவர் இயக்கியிருக்கும் படம் இன்று நேற்று நாளை.

டைம் மெஷினை வைத்து ஃபாண்டஸி சப்ஜெக்ட்டாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இப்படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தை வருகிற 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் திடீர் திருப்பமாக, இன்று நேற்று நாளை படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை அபி அபி பிக்சர்ஸ் அபினேஷ் இளங்கோவன் வாங்கியிருக்கிறார். என்னமோ நடக்குது.


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் ஆர்யா?
வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை: 2-ம் பாகம் எடுக்க முடிவு
ரசிகர்களை கவர்ந்தது இன்று நேற்று நாளை!
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்
காந்திக்கும் செல்ஃபியா ?
விஷ்ணுவுக்காக கதை கேட்காமல் நடித்த ஆர்யா
இன்று நேற்று நாளை டைம் மிஷின் கதை
சமுத்திரக்கனி நடிக்கும் \'பெட்டிக்கடை இன்று விடுமுறை\'
முக்காலத்தையும் சொல்லும் இன்று நேற்று நாளை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions