முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கும் "இனி வரும் நாட்கள் "

Bookmark and Share

முழுக்க  பெண்கள்  மட்டுமே நடித்திருக்கும்

மலையாளத்தில்  முப்பதுக்கும்  மேற்பட்ட  படங்களை  இயக்கிய  பிரபல  இயக்குனர்  துளசிதாஸ்  தமிழில்  இயக்கும்  படம்  "இனி வரும் நாட்கள் " MJD புரொடக்ஷன்  தயாரிப்பில்  உருவாகும்  இப்படத்தில் முழுக்க , முழுக்க  பெண்கள்  மட்டுமே  நடித்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில்  கூட  ஆண்கள்  நடிக்கவில்லையாம். இனியா, ஆர்த்தி, சுபிக்சா, ஈடன், அர்ச்சனா ஆகியோர்  கதாநாயகிகளாக  நடிக்கிறார்கள் . முக்கிய கதாபாத்திரத்தில் நதியா  நடிக்கிறார்கள்.

டாக்குமெண்டரி  எடுக்க போகும்  கல்லூரி  மாணவிகளின் பயணத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவமும், அதை  தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சிகளும், சஸ்பென்ஸ் கலந்த திரில்லர்  திரைக்கதையாக அமைத்திருக்கிறோம்.

பெண்களுக்கு  நடிப்பில் முக்கியத்துவம்  எல்லா படங்களிலும்  கிடைத்து விடுவதில்லை,  ஆனால்  இந்த படத்தில்  முழுவதுமே  பெண்கள் மட்டும் நடிப்பதால், அவர்கள் தங்கள்  திறமையை  வெளிகாட்ட  ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது ... பாட்டு, சண்டை காமெடி  என்று   பொழுதுபோக்கு அம்சங்களும் படத்தில்  நிறைய இருக்கிறது ..

படத்தில்   கதாநாயகிகள்  இருக்கிறார்கள்  கதாநாயகன்  எங்கே? என்று கேட்டதற்கு  படத்தின்  திரைக்கதையே  நாயகன், என்று  சொல்கிறார் இயக்குனர் துளசிதாஸ் ..படப்பிடிப்பு  கம்பம், நாகர்கோவில், தேக்கடி  உள்ளிட்ட  பகுதிகளில் நடைபெற்று  வருகிறது .. 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions