
வாகை சூடவா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் இனியா. மலையாள நடிகையான இவர் அதற்கு முன்பு பாடகசாலை, யுத்தம் செய் ஆகிய படங்களில் ஸ்ருதி என்ற பெயரில் நடித்திருந்தார்.
ஆனால், 'வாகை சூடவா' படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பு இனியாவை பெரிய நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையடுத்து அருள்நிதியுடன் மெளனகுருவில் நடித்தவர், அம்மாவின் கைபேசி, கண்பேசும் வார்த்தைகள் போன்ற படங்களில் நடித்தார்.
இதில் கண்பேசும் வார்த்தைகள் படத்தில் ஒரு பெட்ரூம் பாடலிலும் கவர்ச்சிகரமாக நடனமாடியிருந்தார். ஆனால் படங்களின் தோல்வி இனியாவின் மார்க்கெட்டை சரித்தது. அதனால்தான் நான் சிகப்பு மனிதன் படத்தில் வில்லியாக நடித்த அவர், தற்போது கேரக்டர் நடிகை போன்று மூன்று ஹீரோயின்களில் ஒருவராக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், மீண்டும் மெயின் ஹீரோயினாக முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க அவர் சில டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி இனியா சான்ஸ் கேட்டு சென்ற இடத்தில் ஒரு டைரக்டர், அவரை பார்த்தவர், உடம்பு இப்படி ஆன்ட்டி மாதிரியிருந்தால் எப்படி ஹீரோயின் சான்ஸ் தர முடியும்.
அதனால் முதலில் உடம்பை ஸ்லிம் பண்ணிவிட்டு வாருங்கள். அதன்பிறகு ஹீரோயின் சான்ஸ் தருவதைப் பற்றி யோசிக்கலாம் என்றாராம். அதனால் இதுவரை சாப்பாடு விசயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்த இனியா, இப்போது டயட்ஸ் கடைபிடித்து உடல் எடையை குறைத்துக்கொண்டிருக்கிறாராம்.
Post your comment