பேய் வேடத்தில் நடிக்கிறார் இனியா!

Bookmark and Share

பேய் வேடத்தில் நடிக்கிறார் இனியா!

வாகை சூடவா இனியாவின் கைவசம் பல படங்கள் உள்ளன என்றாலும், அதில் ஓரிரு படங்களில் மட்டுமே அவர் கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது தனது மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால்தான் இப்படி சிறிய வேடங்களிலும் நடிக்கிறாராம் இனியா. மேலும், தனது மார்க்கெட்டை உயர்த்திப் பிடிக்க சில நடிகைகளைப்போன்று கவர்ச்சியாக நடிக்க இனியாவுக்கு விருப்பம் இல்லையாம்.

அதனால் மிரட்டலாக திறமை காட்டக்கூடிய வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், மாசாணிக்குப்பிறகு பேய் கதைகளில் நடிக்க சில டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு வருகிறார் இனியா.

அதனால், கேரளாவில் இருந்து கொண்டே டைரக்டர்களுக்கு போன் போட்டு சான்ஸ் கேட்கும் அவர், போனிலேயே கதையை கேட்கிறார். அப்படி தனக்கு கதை பிடித்து விட்டால், 15 லட்சம் சம்பளம் கேட்கும் இனியா, பேச்சுவார்த்தைக்குப்பிறகு 7 லட்சத்தில் நடிக்கவும் சம்மதம் சொல்கிறார்.

அப்படி பேரம் படிந்த ஒரு படத்தில் அதிரடியான பேயாக நடிக்க தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறார் இனியா.


Post your comment





Related News
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா
இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்!
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்!
சிம்ரனை அடித்த இனியா!
பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions