புதுமுக ஹீரோக்களுக்கு ஜோடியாகும் இனியா!

Bookmark and Share

புதுமுக ஹீரோக்களுக்கு ஜோடியாகும் இனியா!

வாகை சூடவா இனியா தமிழ் சினிமாவில் நல்லதொரு குடும்பப்பாங்கான நடிகையாகி விட வேண்டும் என்பதுதான் இலக்காக வைத்திருந்தார். ஆனால், அந்த படத்திற்கு பிறகு மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் அதே கண்டிசனுடன்தான் நடித்தார்.

ஆனால் அந்த கண்டிசனே அவருக்கு வேட்டு வைத்து விட்டது. பின்னர் அவரை படங்களுக்கு புக் பண்ண ஆளில்லை. அதனால் வேறு வழியில்லமல் மிர்ச்சி செந்தில் நடித்த கண்பேசும் வார்த்தைகள் எனற் படத்தில் ஓரளவு கிளாமருக்கு மாறினார். அப்படத்தில் ஒரு விரகதாப பாடலில்கூட நடித்திருந்தார். ஆனபோதும் அவரது பெருத்த உடல்கட்டு ரசிகர்களை கவரவில்லை.

விளைவு, இனிமேல் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்த இனியா, கேரக்டர் வேடங்களில் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதேபோல், முன்னணி ஹீரோக்களின படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் இதற்கு முன்பு புதுமுக ஹீரோக்களுடன் டூயட் பாட தயங்கிய இனியா, இப்போது நிராயுதம் படத்தை இயக்கியுள்ள பார்கவி அடுத்து இயக்கும் படத்தில் ஒரு புதுமுக ஹீரோவுடன் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதோடு புதுமுக நடிகருக்கு எந்தவித தடையும் விதிக்காமல் கதைக்கு ஏற்ப நெருக்கமாக நடிப்பேன் என்றும் உறுதி அளித்திருக்கிறார் இனியா.


Post your comment





Related News
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா
இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்!
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்!
சிம்ரனை அடித்த இனியா!
பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions