பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி

Bookmark and Share

பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி

சிம்ரன், இனியா, நிகிஷா பட்டேல், கணேஷ், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள படம், ‘கரையோரம்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இனியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 


அதில், “ கதாநாயகியாகத்தான் படங்களில் வரவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ஒரு நடிகை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பேன். நட்புக்காக, ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஆடினேன். வில்லி வேடம் எனக்கு பிடித்து இருந்ததால், நடித்தேன். கதாநாயகியாக நடித்தால்தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. 

அதன் பின் அவரிடம் சக கதாநாயகிகளில் சிலர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். உங்களால் அப்படி வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறதா? என்ற கேட்ட போது, நான் பணத்துக்காக சினிமாவுக்கு வரவில்லை. 

திறமையாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே வந்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இப்போது என் கைவசம் பத்து படங்கள் இருந்திருக்கும். நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன். அப்படி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. 

மேலும் நான் என் இலக்கை இன்னும் அடையவில்லை. தமிழ் பட உலகில் எனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. மலையாள பட உலகிலும் பிரபலமாகி வருகிறேன். தெலுங்கு, கன்னட பட உலகில் இப்போதுதான் அறிமுகமாகி இருக்கிறேன். 

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும். இந்தியில், ஷாகித் கபூருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன்” இவ்வாறு இனியா கூறினார்.


Post your comment





Related News
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா
இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்!
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்!
சிம்ரனை அடித்த இனியா!
நடிகை சிம்ரனை அடித்த இனியா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions