பிளேபாய் கதையில் நடிக்கும் இனியா

Bookmark and Share

பிளேபாய் கதையில் நடிக்கும் இனியா

‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இனியா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘காதல் சொல்ல நேரமில்லை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக உதய்குமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், கஞ்சா கருப்பு, இளையராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீநிவாசன். குமார் பாண்டியன் என்பவர் இசையமைக்கிறார். ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஸ்ரீசினி கிரியேசன்ஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது.

எல்லா பெண்களையும் வசப்படுத்திவிட வேண்டும் என்று நினைக்கும் பிளேபாய் ஒருவன், தனக்கு உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொல்லி கொண்டிருப்பான். அந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்க்கையை பாதிக்கிறது  என்பதை மையக்கருவாக வைத்து படமாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா ஆகிய இடங்களில் படமாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 


Post your comment





Related News
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா
இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்!
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்!
சிம்ரனை அடித்த இனியா!
பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions