படப்பிடிப்பில் நடிகைகள் இனியா, நிகிஷா குடுமிபிடி சண்டை

Bookmark and Share

படப்பிடிப்பில் நடிகைகள் இனியா, நிகிஷா குடுமிபிடி சண்டை

நடிகைகள் இனியாவும், நிகிஷா படேலும் படப்பிடிப்பில் குடுமிபிடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் கரையோரம் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில் சிம்ரனும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ஜே.கே.எஸ். இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இனியாவுக்கும் நிகிஷாவுக்கும் யார் பெரிய நடிகை என்பதில் பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று டைரக்டரை நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது.

அடிக்கடி வாய்த்தகராறிலும் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இவர்கள் சண்டை எல்லை மீறியது. ஒருத்தரை யொருத்தர் திட்டினார்கள். திடீரென குடுமியை பிடித்து சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்ததும் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். இருவரையும் பிரித்து விட்டார்கள்.

இருவர் சண்டையை நேரில் பார்த்த படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும் போது, கரையோரம் படத்தில் நிகிஷாதான் நாயகி. இனியா வில்லியாக வருகிறார். இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டனர் என்றனர். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions