இஞ்சி இடுப்பழகி என்ன கதை?

Bookmark and Share

இஞ்சி இடுப்பழகி  என்ன கதை?

செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தை  பிவிபி நிறுவனம் தயாரித்தது. அந்தப் படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், மீண்டும் பிவிபி நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்கள் ஆர்யாவும் அனுஷ்காவும். இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் தற்போது  உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பழம்பெரும் தெலுங்குப்பட இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனான கே.எஸ்.பிரகாஷ் இஞ்சி இடுப்பழகி படத்தை இயக்குகிறார்.  நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். 

இஞ்சி இடுப்பழகி படத்தின் கதைப்படி அனுஷ்கா குண்டான பெண்மணியாக நடிக்கிறாராம். ஏற்கனவே குண்டாக உள்ள அனுஷ்கா இந்த கேரக்டருக்காகவும் தன் உடல் எடையை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார். தன் உடல் எடையைக் குறைப்பதற்காக பிட்னஸ் டிரைனராக இருக்கும் ஆர்யாவிடம் அனுஷ்கா பயிற்சி எடுப்பது போலவும், பின்னர் இருவருக்கும் காதலர் மலர்வதுதும் இப்படத்தின் கதை. சுருக்கமாக சொல்வது என்றால் தர்பூசணி அனுஷ்காவை ஆர்யா எப்படி இஞ்சி இடுப்பழகி ஆக்குகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் எடுப்பதாக சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க ஆந்திராவிலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions