இஞ்சி இடுப்பழகி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

Bookmark and Share

இஞ்சி இடுப்பழகி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது

‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா-அனுஷ்கா இணைந்து நடித்து வரும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்னும் பெயரில் உருவாகிறது.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் எடை குறைப்பு பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது. இதில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும், அதற்கு பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார். பல பிரத்யேகக் காட்சிகள் சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் எடுக்கப்பட்டன. ஆர்யா பங்கேற்று வெற்றிப் பெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றியும் எடுக்கப்பட்டு உள்ளது.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions