'இஞ்சி இடுப்பழகி' படத்தின் துவக்கவிழா இனிதே ஆரம்பமானது!

Bookmark and Share

 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் துவக்கவிழா இனிதே ஆரம்பமானது!

மெல்லிய இடையாள் என்றும் இஞ்சி இடுப்பழகி என்றுப் பெண்களை பாராட்டுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இன்று அந்த அடை மொழியை , வர்ணனையை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.எண்ணற்ற விவாதங்கள், ஆலோசனை கூடங்கள், வர்த்தக ரீதியாக அதை  காசாக்கும் விளம்பர யுத்திகள், என பல்வேறு முனைகளும் ஒரே நோக்கத்தில் தான் பாய்ந்து வருகிறது. பரவலாக  பேசப் படும் இந்த விஷயத்தை பி  வி பி சினிமா நகைசுவை மிளிர சொல்ல வருகிறது. 

பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும் , தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே .எஸ். பிரகாஷ் தனது  இயக்கத்தில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற தலைப்பில் நகை சுவை மிளிர சொல்லி இருக்கிறார். 

' இஞ்சி இடுப்பழகி என்ற இந்தத் தலைப்பே கதை  சொல்லும்.  உடல் வாகை பற்றிய படம் என்பதால் உலகமே போற்றும்  ஆணழகனும்  , பெண்ணுக்கு பெண்ணே   பேராசை  கொள்ளும் பேரழகை  கொண்ட அனுஷ்காவும் தான் நடிக்க வேண்டும் என்பதை எந்த விவாதமும் இன்றி ஒருமனதாக தீர்மானித்தோம்.

ஈரேழு லோகமும்  வியந்து போகும் ஜோடியான ஆர்யாவும் அனுஷ்காவும் நடிக்கும் பொழுது அதை கண்கவர் வண்ணத்தில் பதிவு  செய்ய நீரவ் ஷாவே பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணி  செய்கிறேன்.. செவிகளுக்கு தேனூட்டும் இசையைத் தர மரகதமணி இசையமைப்பு செய்கிறார். எனது தகப்பானார் ராகவேந்திர ராவ்  அவர்களுக்கு தமிழ் திரை உலகில் இருக்கும் மரியாதையையும் , நன்மதிப்பையும் கண்டு வியந்து  போனேன்.  நானும் அவர் வழி நல்ல திரைப்படங்களை இயக்கி அந்த நற்பெயரையும் ரசிகர்களையும் சம்பாதிப்பேன்" என  நம்பிக்கை மிளிர்ந்திடக் கூறினார் இளம் இயக்குனர் கே எஸ் பிரகாஷ். 

இன்று 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பூஜை ஏ வி எம் அரங்கில் உள்ள பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் , தயாரிப்பாளர்கள் என திரை உலக பிரமுகர்கள் திரண்டு வந்து  படக் குழுவினரை வாழ்த்தினர்.


Post your comment

Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions