'இனிமே இப்படித்தான்' ஜுன் 12 வெளியீடு

Bookmark and Share

'இனிமே இப்படித்தான்' ஜுன் 12 வெளியீடு

சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள் 'இனிமே இப்படித்தான்' படம் ஜுன் மாதம் 12ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் இது. அந்தப் படத்தில் ஜோடியாக நடித்த ஆஷ்னா மீண்டும் சந்தானத்துடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆஷ்னா கிளாமரில் கலக்கியுள்ளாராம்.

ஒரு அழகான பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவனைப் பற்றிய கதைதான் இந்தப் படம். சந்தானம் தனியார் தொலைக்காட்சியில் ஒரு சாதாரண நடிகராக நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிட் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த தன்னுடைய நண்பர்களான முருகன், பிரேம் ஆனந்த் ஆகியோரை 'இனிமே இப்படித்தான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன் ஆகியோரையும் சந்தானம் அறிமுகப்படுத்துகிறார். தயாரிப்பாளராக தன்னுடைய சொந்தப் பணத்தைப் போட்டு முதன் முறையாக படத்தைத் தயாரிக்கும் சந்தானம் இந்தப் படத்தை நிறையவே எதிர்பார்க்கிறார்.

தொடர்ந்து சில முக்கிய இயக்குனர், நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களில் அவர் நாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions