இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ மே 10ம் தேதி வெளியீடு

Bookmark and Share

இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ மே 10ம் தேதி வெளியீடு

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

முருகானந்த் இயக்கியுள்ள இப்படத்தை சந்தானம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்வு செய்யப்பட்டது.

தற்போது இப்படத்தின் பாடல்களை மே 10ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதில் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்களான சிம்பு, ஆர்யா, உதயநிதி, வி.டி.வி கணேஷ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. 


Post your comment





Related News
தியேட்டர்கள் அதிகரிப்பு : உற்சாகத்தில் சந்தானம்
காமெடி சீசன் தொடங்குமா?
இனிமே இப்படிதான் எலி படத்திற்கு போட்டியா?: சந்தானம் பேட்டி
சுதந்திரம் கேட்கும் சந்தானம்!
இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?
1 மில்லியனை கடந்த இனிமே இப்படித்தான் டிரைலர்!
‘U’ சான்று பெற்றது ‘இனிமே இப்படித்தான்’
\'இனிமே இப்படித்தான்\' ஜுன் 12 வெளியீடு
சொன்ன வார்த்தையை காப்பாற்றிய சந்தானம்
\'இனிமே இப்படித்தான்\' கோடைகால கொண்டாட்டமாக வருகிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions