ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் தமிழில் ஒளிபரப்பாகிறது

Bookmark and Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் தமிழில் ஒளிபரப்பாகிறது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பானது. இது மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கையும் எகிற வைத்தது.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளும் தமிழ் வர்ணணையோடு ஒளிபரப்பாக இருக்கிறது. சோனி குரூப்பிலிருந்து வரும் சோனி கிக்ஸ் தொலைக்காட்சிதான் ஒளிபரப்புகிறது.

தமிழ் தவிர ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்புகிறது. இதனை ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஐபில் போட்டி ஒளிபரப்பின் மூலம் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு போட்டிகளின் மூலம் 950 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது 10 விளம்பரதாரர்கள் உள்ளனர். வருகிற போட்டியின் மூலம் மேலும் 3 விளம்பரதாரர்கள் இணைகிறார்கள். விளம்பர கட்டணத்தையும் 15 சதவிகிதம் உயர்த்தி உள்ளனர். 10 விநாடி விளம்பர கட்டணம் 5 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.


Post your comment

Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்
நடிகை அலியா பட் தொழில்பக்தி: தயாரிப்பாளர் புகழாரம்..!
எத்தனை முத்தக் காட்சினாலும் நான் ரெடி: வாணி கபூர்..!
ஷாரூக், தீபிகாபடுகோனே, கத்ரீனா கைப்பின் கலக்கல் ஆட்டத்துடன் ஆரம்பித்த‌ - ஐ.பி.எல் சீசன் 6!
நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேடு தொடர்பாக‌ அமலாக்க பிரிவு விசாரணை!
ப்ரீத்தி ஜிந்தாவும், ஷில்பா ஷெட்டியும் எனக்கு அண்ணி மாதிரி : ஸ்ரீசாந்த்
கிரிக்கெட் சங்கத்துக்கு எதிர்ப்பு :ஷாரூக்கானுக்கு ஆதரவாக பாலிவுட் !
நான் கிரிக்கெட் ரசிகை அல்ல : ஆனால் சச்சின் தெண்டுல்கரை பிடிக்கும் திரிஷா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions