கார்த்திக் சுப்புராஜின் இறைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜின் இறைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடித்துள்ள படம் ‘இறைவி’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

மேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களைப் போல ‘இறைவி’ படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
இறைவி வசூல் விவரம் வெளியானது!
தெறி இயக்குனர் மனம் கவர்ந்த இறைவி படம்!
தமிழகத்தில் 450 தியேட்டர்களில் இறைவி கொண்டாட்டம்!
இறைவி ரன்னிங் டைம் வெளியானது!
ஏப்ரலில் வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி!
விஜய்க்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!
சினிமா லட்சியமா ? சீர்மிகு சமூகமா? விடை தேடும் படம் ’விரைவில் இசை’
கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் - இறைவி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions