கோர்ட் தடை நீங்கியது: இரவும் பகலும் 20ந் தேதி ரிலீஸ்

Bookmark and Share

கோர்ட் தடை நீங்கியது: இரவும் பகலும் 20ந் தேதி ரிலீஸ்

அங்காடி தெரு மகேஷ் மற்றும் அனன்யா நடித்துள்ள படம் இரவும் பகலும் வரும். படத்தை ஸ்கை டாட் பிலிம்ஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் பெரியசாமி தயாரித்துள்ளார். பாலா ஸ்ரீராம் இயக்கி உள்ளார். ஏ.வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார்.

ஜெகன் காமெடியனாக நடித்துள்ளார். தீனா இசை அமைத்துள்ளார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பொறியியல் கல்லூரி மாணவனான மகேஷ் பகலில் நல்ல மாணவனாக கல்லூரிக்கு செல்கிறார். இரவில் கெட்ட திருடனாக திருடச் செல்கிறார்.

அவர் ஏன் திருடுகிறார். ஏன் பொறியில் படிக்கிறார் என்ற கேள்விக்கான பதில் இரவும் பகலும் வரும் படத்தின் திரைக்கதை. படம் கடந்த 6ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ஆனால் படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் வழக்கு தொடர்ந்தனர். தற்போது இந்த வழக்கில் தயாரிப்பாளருக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை தொடர்ந்து வருகிற 20ந் தேதி படத்தை வெளியிடுகிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions