சட்டவிரோத கட்டிட விவகாரம்: நடிகர் இர்பான்கான் மீது நடவடிக்கை

Bookmark and Share

சட்டவிரோத கட்டிட விவகாரம்: நடிகர் இர்பான்கான் மீது நடவடிக்கை

பிரபல நகைச்சுவை நடிகரும், டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளருமான 35 வயது கபில் சர்மா, மும்பை கோரேகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உரிய அனுமதி பெறாமல், கட்டிடம் கட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவருக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பியது.

பரபரப்பான இந்த தருணத்தில், இதே அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது தளத்தில் வசிக்கும் பிரபல இந்தி நடிகர் இர்பான்கானும், சட்டவிரோதமாக கட்டிடம் கட்டி மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்கொண்டது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மராட்டிய பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தின் 53 (1)-வது பிரிவின்கீழ், கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் இர்பான்கானுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் இந்த குடியிருப்பின் 5 மற்றும் 12-வது தளத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் தொடர்பான அறிக்கை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவிடம் கடந்த 9-ந் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிவடைந்ததும், இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே, இர்பான்கானின் தனிப்பட்ட உதவியாளரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். நடிகர் இர்பான்கானை தொடர்பு கொள்ள முடியவில்லை. 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions