கபாலி பற்றி தவறாக பேசிய பாலிவுட் நடிகர்!

Bookmark and Share

கபாலி பற்றி தவறாக பேசிய பாலிவுட் நடிகர்!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மடாரி’ படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியானது. இந்த போஸ்டர் டிசைனை அப்படியே காப்பியடித்தது போன்று தற்போது ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் போஸ்டர்களும் சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்த இரண்டு போஸ்டர்களையும் பார்க்கும்போது, இர்பான் கான் உருவத்துக்கு பதிலாக ரஜினி உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பெயர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, அச்சு அசல் ‘மடாரி’ படத்தின் போஸ்டரை ஒட்டியே இந்த போஸ்டரும் அமைந்துள்ளது.

இந்த போஸ்டரை பார்த்த இர்பான் கான் தன்னுடைய படத்தின் போஸ்டரை ரஜினி திருடிவிட்டார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கூறும்போது, ‘என் படம் சிறிய பட்ஜெட் படம்தான். எனது படத்தின் போஸ்டரை ரஜினி காந்தின் கபாலி படக்குழுவினர் திருடிவிட்டனர்.

அந்த போஸ்டரையும் பாருங்கள். என்னுடைய படத்தின் போஸ்டரையும் பாருங்கள். ஒன்றும் பிரச்சனை இல்லை. அதேபோல், என்னுடைய படத்தையும் பாருங்கள்... அவருடைய படத்தையும் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், விசாரித்து பார்க்கையில் இர்பான்கான் கூறிய ‘கபாலி’ படத்தின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டது அல்ல. ரசிகர்களால் அந்த போஸ்டர் தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘மடாரி’ படம் வருகிற ஜூலை 15-ந் தேதி வெளியாகவிருக்கிறது. அன்றைய தேதியில்தான் ‘கபாலி’ படமும் வெளியாகப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்
சட்டவிரோத கட்டிட விவகாரம்: நடிகர் இர்பான்கான் மீது நடவடிக்கை
'ஆகம்' பாடல் மூலம் கலாமுக்கு மரியாதை செலுத்தும் படக்குழு
இர்பான்கான் நடிக்க ஐஸ்வர்யா ராய் தான் காரணம்
இர்ஃபான் நடிக்கும் \'ஆகம்\' திரைப்படத்தில் ப்ரெஞ்ச் நடிகை
இளம் கதாநாயகன் இர்ஃபான் நடிக்கும் \'ஆகம்\'
எதிர்பார்ப்பில் இர்பான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions