பொங்கி எழு மனோகராவை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான இர்பான்

Bookmark and Share

பொங்கி எழு மனோகராவை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாரான இர்பான்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமாகி, ‘பட்டாளம்’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவர் இர்பான். இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘பொங்கி எழு மனோகரா’. இப்படத்தில் அர்ச்சனா, அருந்ததி நாயர் என இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர். சிங்கம் புலி, சம்பத் ராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தை ரமேஷ் ரங்கசாமி இயக்கியிருந்தார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். காமெடியுடன் காதல், செண்டிமெண்ட் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியானது.

தற்போது இப்படத்தை அடுத்து புதிய படத்தில் நடிக்க இர்பான் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் வெளியிடவுள்ளனர்.

இர்பான் சதாசிவம் இயக்கத்தில் ‘ரு’ என்னும் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
பிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் சென்னையில் காலமானார்
பொங்கி எழு மனோகரா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு
பொங்கி எழு மனோகராவுக்காக மாடுகளிடம் உதை வாங்கிய இர்பான்
ஜன.30ல் பொங்கி எழு மனோகரா: அஜீத், சரத்குமாருடன் போட்டி போடும் இர்பான்
மனோகருடு இசை வெளியீட்டு விழாவில் நிறைவேறாத ஆசையை தெரிவித்த ஷங்கர்
பொங்கி எழு மனோகரா ஜனவரி 30க்கு தள்ளிப்போனது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions