'ஆகம்' பாடல் மூலம் கலாமுக்கு மரியாதை செலுத்தும் படக்குழு

Bookmark and Share

'ஆகம்' பாடல் மூலம் கலாமுக்கு மரியாதை செலுத்தும் படக்குழு

 'ஆகம்' படத்தில் மறைந்த திரு அப்துல் கலாமின்  ஊக்கம் தரும் வார்த்தைகளையும் , சொற்றொடர்களையும் மையமாகக் கொண்டு இயற்றப் பட்ட  பாடல் ஒன்றும் இருக்கிறது.

இந்தப் பாடலை பற்றி இயக்குனர் ஸ்ரீராம் கூறும் போது ' சமீபமாக பலப் படங்களில் கலாம் ஐயாவுக்கு  மரியாதை செலுத்தும் வண்ணம் பாடல்கள் பதிவாவதை நான் அறிவேன்.

ஆகம் படத்தில்  அவரை பற்றிய பாடல் இருக்க வேண்டும் என்பதை கடந்த  வருடம் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே நாங்கள்  முடிவு எடுத்து விட்டோம்.அதைக் குறித்து அவரை நேரில் சந்தித்து விவாதிக்கலாம் என்று  எண்ணியப் போதுத்  தான் பேரிடியாக அவர் நம்மை விட்டு பிரிந்துப் போன செய்தி வந்தது.

கல்வி குறித்தும் , நமது நாட்டின் அறிவு செல்வங்கள் மற்ற நாடுகளுக்கு செல்வம் நாடி போவதால் வரும் மனித வள இழப்பையும் கூறும் கதை என்பதாலும் , அவரை குறித்த பாடல் ஒன்று இப்படத்தில் இருத்தல் அவசியம் என்றுக் கருதியதாலும் அந்தப் பாடலை  பதிவு செய்து விட்டோம்.

ஜாய் ஸ்டார் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்  கோடீஸ்வர ராவ் தயாரிக்கும்  இப்படத்தில் இர்பான் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீக்ஷிதா. குணசித்திர நடிகர்  ஜே பி  உடன் ரியாஸ் கான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தமிழ் திரை உலகம் கண்டிராது  என சொல்லலாம்.

என் முதல் படத்திலேயே இத்தகைய சவாலான கதையை  தேர்ந்து எடுத்ததற்கும், திறனுடன் செயல்பட்டதற்கும் என்னுடைய குழுவினருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் இயக்குனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions