
பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா ஆகிய படங்களில் நடித்தவர் இர்பான். சின்னத்திரையில், கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற இவருக்கு டிவித்தொடர்களில் கிடைத்த பெயரும் புகழும்கூட இன்னும் சினிமாவில் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இருப்பினும், அடுத்தபடியாக சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்ற சொல்லிக்கொண்டு தற்போது முழுநேர வெள்ளித்திரை நடிகராகியிருக்கும் இர்பான், தற்போது நடித்துள்ள ரு என்ற படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
காரணம், இந்த படம் சமீபகாலமாக சமுதாயத்தில் பரவலாக நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு அதிரடியான படமாம். அதனால் முதன்முதலாக ஆக்சன் ஹீரோவாக அவதரித்திருக்கும் இர்பான், இந்த ரு படம் சமுதாயத்துக்கு தேவையான படம் என்பதோடு எனது கேரியருக்கும் தேவையான படமாகும்.
முக்கியமாக, பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு இந்த மாதிரியும் தண்டனை கொடுக்க முடியுமா? என்று யோசிக்க வைக்கும் படம். மேலும், ரு என்றால் என்ன என்பது புரியாமல் பலரும் தவிக்கிறார்கள்.
ரு என்பது ஐந்து என்று பொருள்படும். அதாவது ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்கிறார்கள் அவர்களை, நான் எப்படி பழிவாங்குகிறேன் என்பதுதான் ரு படத்தின் கதை என்கிறார் இர்பான்.
Post your comment
Related News | |
▪ | எதிர்பார்ப்பில் இர்பான்! |
![]() |