எதிர்பார்ப்பில் இர்பான்!

Bookmark and Share

எதிர்பார்ப்பில் இர்பான்!

பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா என சில படங்களில் நடித்தவர் இர்பான். தற்போது ரு என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனபோதும் சின்னத்திரையில் அவர் நடித்த கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்கள்தான் அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தன.

இருப்பினும் தற்போது அவருக்கு சினிமாவில் நடிப்பதே முழு நோக்கமாகி விட்டதோடு, வெறும் காதல் சம்பந்தப்பட்ட கதைகளில் மட்டுமில்லாமல் ஆக்சன் ஹீரோ கதைகளில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், ரு படம் அவரது ஆக்சன் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.  அதோடு, இந்த டைட்டிலே வித்தியாசமாக இருப்பதால் இந்த படத்திற்கு பிறகு இர்பானின் சினிமா மார்க்கெட் சூடு பிடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் இதுவரை இர்பானை கண்டுகொள்ளாமல் இருந்த கோடம்பாக்க டைரக்டர்கள் இப்போது அவரிடம் கதை சொல்வதற்காக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ரு படத்தின் ஆடியோ தினத்தன்று விழா முடிந்து அவர் வெளியே வரும் வரை காத்திருந்த இரண்டு இயக்குனர்கள் அவரிடம் தங்களது கதைகளின் அவுட்லைனை சொன்னதோடு, சில தினங்களில் அலுவலகத்துக்கு அழைத்து அட்வான்ஸ் தருவதாகவும் கூறிச்சென்றார்களாம்.

அதனால் உற்சாகத்தில் இருக்கும் இர்பான், இந்த ரு படம் வெளிவந்தால் தனது சினிமா மார்க்கெட் எகிறி விடும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் தற்போது இருந்து கொண்டிருக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions