இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி

Bookmark and Share

இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி

துபாயில் நடிகர் விக்ரம் நடித்த இருமுகன் திரைப்படம் நேற்று முதல் நாளாக துபாயில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு முன்பாக துபாயில் ஒரு ஓட்டலில் நடிகர் விக்ரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இருமுகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி உள்ளது. இது எனக்கு தமிழில் 36-வது திரைப்படம். இந்த திரைப்படத்தை சிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கான கதை மற்றும் இயக்கத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்திற்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும், பாடல் காட்சிகளும் சிறந்த முறையில் வந்துள்ளது. அனைத்து காட்சிகளும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நான் இரு வித்தியாசமான வேடங்களில் வருகிறேன். என்னுடன் நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இதில் நடிகர் நாசர் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நகைச்சுவையும் இருக்கும். இதற்காக தம்பி ராமையா சிறப்பான நகைச்சுவையுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாக ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இருமுகன் திரைப்படத்தின் தொடக்க விழாவை துபாயில் 7 மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த திரைப்படத்தை துபாயில் உள்ள எப்.டி.பி நிறுவனம் வெளியிடுகிறது.

நேற்று துபாயில் மாலை தேரா சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த திரையரங்கம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது. திரைப்படத்தின் முதல்நாள் காட்சியில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார்.


Post your comment





Related News
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions