இறுதியாக வெளிவரும் மாதவனின் இறுதிச்சுற்று!

Bookmark and Share

இறுதியாக வெளிவரும் மாதவனின் இறுதிச்சுற்று!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்று தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இதில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்தது. பின்னர் சில காரணங்களால் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை சி.வி.குமாரின் திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். யுடிவி நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. இப்படம் ஜனவரி மாதம் 29ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
43 வருடங்களுக்கு பிறகு ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions