மாதவனின் இறுதிச் சுற்று கோடை வெளியீடு...

Bookmark and Share

மாதவனின் இறுதிச் சுற்று கோடை வெளியீடு...

மாதவன், ரித்திகா சிங் மற்றும் பலர் நடிக்க பெண் இயக்குனரான சுதா இயக்கியுள்ள ’இறுதிச் சுற்று’ படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்தியில் ’சாலா காதூஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மாதவன் இந்தப் படத்தில் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக மாதவன் சிக்ஸ்-பேக் அப் எல்லாம் வைத்து நடித்திருக்கிறார்.

தமிழில் மாதவன் நடித்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டது. அவர் கடைசியாக கமல்ஹாசனுடன் இணைந்து ’மன்மதன் அம்பு’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படமும் தோல்விப் படமாக அமைந்துவிட்டது.

அதன் பின் ஹிந்திப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த மாதவன் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். ’இறுதிச் சுற்று’ படத்தை இயக்கியுள்ள சுதா, இதற்கு முன் தமிழில்  ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் நடித்த ’துரோகி’ படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை.

இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் தற்போது ’இறுதிச் சுற்று’ படத்தின் வாய்ப்பைப் பெற்று படத்தை முடித்தும் விட்டார். மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளர் சுதா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை பெண் இயக்குனர் இயக்குவது அபூர்வமான விஷயம்தான். சுதாவின் முந்தையப் படமான ’துரோகி’ படமும் படத்தின் ஆக்ஷனால் கொஞ்சம் பேசப்பட்டது. இந்த ’இறுதிச் சுற்று’ சுதாவுக்கு வெற்றியைத் தரட்டும். 


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions