மாதவனுக்கு ஜோடியாக அசின்!

Bookmark and Share

மாதவனுக்கு ஜோடியாக அசின்!

ஸ்ரீகாந்த்-விஷ்ணு நடித்த துரோகி படத்தை இயக்கிய சுதா, தற்போது இயக்கும் படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரிதிகா சிங் நடிக்கும் இப்படம் தமிழ், இந்தியில் உருவாகிறது.

இந்த நிலையில், இதற்கடுத்து ஒரு படத்தில் நடிப்பதற்கும் மாதவன் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். அந்த படத்தில் நாயகியாக நடிக்க அசினிடம் பேசியுள்ளனர். விஜய்யுடன் நடித்த காவலன் படத்திற்கு பிறகு மீண்டும் அசின் தமிழுக்கு வருவதாக செய்திகள் வெளியானபோதும் அது உண்மையாகவில்லை.

ஆனால், இப்போது இந்தியில் அசினின் மார்க்கெட் சரிந்து கிடப்பதால், கண்டிப்பாக தமிழுக்கு வந்து விடுவார் என்று தெரிகிறது. மேலும், மாதவன் நடிக்கிற படம் என்றதும் உடனே காதுகளை தீட்டிக்கொண்டு கதை கேட்ட அசின், கதையை உடனே ஓகே பண்ணி விட்டாராம்.

ஆனபோதும், சம்பள விவகாரத்தில்தான் அவர் இன்னும் மசியவில்லையாம். அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மேலும், மாதவன்-அசின் இருவருக்குமே இந்தியில் மார்க்கெட்டில் இருப்பதால், அந்த படத்தை தமிழ், இந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியிடவும் திட்டமிட்டப்பட்டுள்ளதாம். 


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions