ராம்கோபால் வர்மா உதவியாளர் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் இருவர் ஒப்பந்தம்!

Bookmark and Share

ராம்கோபால் வர்மா உதவியாளர் இயக்கத்தில் அர்ஜூன் நடிக்கும் இருவர் ஒப்பந்தம்!

மிகப்பெரிய தொழில் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் அர்ஜூன். தொழில் சம்பந்தமாக தனது அலுவலர்கள், மற்றும் உதவியாளருடன் வெளிநாடு செல்கிறார். சென்ற இடத்தில் தன்னுடன் வந்த பெண் ஊழியருக்கு மிகப்பெரிய பிரச்சனை எழுகிறது.

அந்தப் பிரச்சனை யாரால் ஏற்பட்டது? அந்த நாட்டினரா? அல்லது தன்னுடன் வந்தவர்களின் சதி வலையா?. அதை எவ்வாறு முறியடித்து தாய்நாடு திரும்புகிறார் அர்ஜூன் என்பதே இந்தப் படத்தின் கதை என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.சமீர்.

சஞ்சய் கொடாவத் வழங்க, சமீர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.எஸ்.சமீர் தயாரித்து, இயக்கும் படம் ‘இருவர் ஒப்பந்தம்’.

கதாநாயகன் அர்ஜூனுக்கு திவ்யா சிங், குஷிகத்வி என் இரு பாலிவுட் முன்னணி கதாநாயகிகள் ஜோடியாக நடிக்க, வில்லனாக ஜே.டி.சக்கரவர்த்தி நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் சிறப்பு நடனத்திற்கு சோனி செறிஸ்டா நடனம் ஆட, மேலும் கசன்கான், சனா, மயில்சாமி, வையாபுரி, செந்தில், பேபி சாய்ஸ், பிரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜானி லால், இசை – சுபாஷ் ஆனந்த், பாடல்கள் - எஸ்.பி.ஹோசிமின், படத்தொகுப்பு – வெங்கடேஷ், தயாரிப்பு மேற்பார்வை - ஆர்.பன்னீர்செல்வம் , கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்  – எஸ்.எஸ்.அமீர்  

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்து, ஓமன் போன்ற வெளிநாடுகளிலும், பெங்களூரு, புனே மற்றும் சென்னையிலும் நடைபெற உள்ளது.

அர்ஜூனின் அதிரடி ஆக்ஷனுக்கு பஞ்சமில்லை. ஜென்டில்மேன், முதல்வன் வரிசையில் இப்படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.சமீர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் இயக்குனர் எஸ்.பி.ஹோசிமின் எழுதியுள்ளார்.


Post your comment





Related News
நிஜக் காதலர்கள் நடித்த ஒரு படம் : \'\'இருவர் ஒன்றானால்\'\' படத்தின் சுவாரஸ்யங்கள்!
சூர்யா படத்துடன் மோதும் புதுமுகங்கள் படம் :\'இருவர் ஒன்றானால்\'
ஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’!
ஆள் அம்பு சேனையுடன் தயாராகும் சரண்
ஆயிரத்தில் இருவராக மாறிய செந்தட்டிக்காளை செவத்தகாளை
நீண்ட இடைவெளிக்குப்பின் \"காதல் மன்னன்\" இயக்குனர்..!
ஏர் முருகாதாஸின் உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றானால்.
லவ் டுடே பட இயக்குனரின் - 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions