மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நான்... இப்படிக்கு "இசை" சாவித்ரி!

Bookmark and Share

மெல்லிய கோட்டுக்கு இந்தப் பக்கம் நான்... இப்படிக்கு

இசை படத்தில் ஜெனிபராக நடித்து தமிழ் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சாவித்ரி. இந்தியில் சுலக்னா என்ற பெயரில் இம்ரான் ஹாஸ்மியோடு மர்டர் 2 படத்தில் நடித்தவரை, தமிழில் சாவித்ரி என்ற பெயரில் தனது இசை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

இப்படத்தில் சாவித்ரியின் நடிப்பைப் போலவே அவரது கிளாமரும் பேசப்பட்டது. இந்நிலையில் வார இதழ் ஒன்றிற்கு தனது கிளாமர் நடிப்பு குறித்து மனம் திறந்துள்ளார் சாவித்ரி.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

நடிப்புல கிளாமரும் ஒரு அங்கம் தான். அதுமட்டுமில்லாம கதைக்கு அது முக்கியமா இருந்ததால நான் பண்ணினேன்.முதல் பாதி கதையில கிளாமரா நடிச்சது தான், இரண்டாம் பாதி கதையை ஜட்ஜ் பண்ண உதவிச்சு.

அதனால அது ஓகே தான்.எல்லை தாண்டி ஏதும் பண்ணலையே. நானும் வச்சிருக்கேன் ஒரு மெல்லிய கோடு. அந்த மெல்லிய கோட்டை தாண்டாமல் தான் நடிச்சிருக்கேன்.

இசை மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நடிப்புக்கு சவாலான கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன்.முதல்படம் எவ்வளவு முக்கியமோ அதே போல இரண்டாவது படமும் முக்கியம் தான்.

அதனால நல்ல கதைகளை எதிர்பார்க்கிறேன்.தமிழ்ல சில கதைகள் வந்திருக்கு. இன்னும் முடிவு பண்ணலை' என்கிறார் சாவித்ரி.இந்தியில் தொடர்ந்து சுலக்னா என்ற பெயரில் நடித்தாலும், தமிழில் சாவித்ரி என்ற பெயரையே தொடரப் போகிறாராம் இவர்.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
சினிமா லட்சியமா ? சீர்மிகு சமூகமா? விடை தேடும் படம் ’விரைவில் இசை’
'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று முதல்!
மீண்டும் ரொமான்ஸில் களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா
இருக்கு ஆனா இல்ல... \'இசை - ஷமிதாப்\' ஒற்றுமை...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions