இசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள்

Bookmark and Share

இசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ்.ஜே.ஆர்யா இயக்கி உள்ள படம் இசை. சாவித்ரி ஜோடியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். கடந்த 30ந் தேதி படம் வெளிவந்தது.

இரண்டு இசை கலைஞர்களுக்கு இடையேயான ஈகோ மோதல் கதை. படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கு சில நிமிடங்களே குறைவானது. படத்தில் இடைவேளைக்கு முன்பு வரும் எஸ்.ஜே.சூர்யா-சாவித்ரி காதல் காட்சியும், இடைவேளைக்கு பிறகு வரும் ஈகோ மோதல் காட்சிகளும் மிகவும் நீளம் என்ற விமர்சனம் வந்தது.

இதனால் படத்தின் நீளத்தில் 7 நிமிடத்தை குறைத்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் ஆபரேட்டர்களே 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை குறைத்து விட்டார்களாம். குறிப்பாக காதல் காட்சிகள் ஆபரேட்டர்களின் கத்தரிக்கு பலியாகி இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions