பொறுமையை சோதிக்கும் நீளமான படங்கள்!

Bookmark and Share

பொறுமையை சோதிக்கும் நீளமான படங்கள்!

இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடக்கூடிய படங்களை எடுத்துவிட்டு, ரசிகர்களின் முணுமுணுப்புக்குப் பிறகு சில காட்சிகள் வெட்டப்பட்டு நீளத்தை குறைப்பது கோலிவுட்டில் வாடிக்கையாகிவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் முதலில் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடியது. படம் வெளியானதும் அதுவே கத்தி படத்துக்கு மைனஸ் பாயிண்ட்டாக சொல்லப்பட்டது. படம் போராடிப்பதாக மவுத் டாக் பரவியதும் சில காட்சிகள் நீக்கப்பட்டன. 

அதேபோல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படமும் ஆரம்பத்தில் 3 மணி நேரம் ஓடுமளவுக்கு நீளம் அதிகமாக இருந்தது. பின்னர் சில காட்சிகள் ஓடி முடிந்த பிறகு, ரசிகர்களின் கருத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டன. ஷங்கரின் ஐ படமும் இதே சிக்கலை சந்தித்தது. காட்சிகள் நீக்கப்படவில்லை என்றாலும் ஐ படத்தின் குறையாக படத்தின் நீளத்தையே ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வரிசையில் இப்போது  எஸ்.ஜே.சூர்யா இயக்கி இசையமைத்து தயாரித்து ஹீரேவாக நடித்துள்ள இசை படமும் இணைந்திருக்கிறது. 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடுகிறது இசை படம். தனக்கே உரிய பாணியில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி உள்ள இசை படம் வெளியாகி பலரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. என்றாலும், படத்தின் நீளம் மிகப்பெரிய மைனஸாகவும் உள்ளது. இதனால் தற்போது 7 நிமிடக் காட்சிகளை குறைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.


Post your comment





Related News
முதல் இடம் பிடித்த அஜித்...! சந்தோஷத்தில் 'தல' ரசிகர்கள்
வசூல் சாதனை படைக்குமா என்னை அறிந்தால்?
\'இசை\'-யில் ஆபாசம் - மனம் மாறிய எஸ்.ஜே.சூர்யா
உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகும் என்னை அறிந்தால்
தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?
குடும்பத்துடன் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்தார் அஜீத்
இசை இன்னும் ஒலிக்காததற்கு காரணம்
நான் நினைத்ததை திரையில் கொண்டு வந்தார் \'தல\' - நடன இயக்குனர் சதீஷ்
நான் இசையமைப்பாளரானதிற்கு ஏ.ஆர்.ரகுமான்தான் காரணம்: எஸ்.ஜே.சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions