'இசை'-யில் ஆபாசம் - மனம் மாறிய எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

'இசை'-யில் ஆபாசம் - மனம் மாறிய எஸ்.ஜே.சூர்யா

குஷி, வாலி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, சிலகாலம் நடிப்பு பக்கம் சென்றுவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர், இயக்கி, நடித்து, இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள படம் இசை.

கடந்தவாரம் வெளியான இசை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் படத்தில் நிறைய ஆபாச காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

இதனால் படம் வெளியான இரண்டொரு நாளில் படத்தில் 7 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டது. இப்போது மேலும் 12 நிமிட காட்சிகளை குறைக்க முடிவெடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இதுப்பற்றி எஸ்.ஜே.சூர்யா நம்மிடம் கூறியதாவது,

இப்படத்தை பார்த்த எனது நலம் விரும்பிகள் படத்தில் கொஞ்சம் ஆபாசம் அதிகமாக இருப்பதாக கூறினார். குறிப்பாக ஹீரோயின் வாயோடு வாய் வைத்து மருந்து கொடுக்கும் காட்சி உள்ளிட்ட காட்சிகளில் அதிக விரசம் இருப்பதாக தெரிவித்தனர். எனக்கும் அந்த உணர்வு இருந்தது.

அவசரம் அவசரமாக படத்தை வெளியிட்டதால் இதுபோன்ற காட்சிகளை என்னால் தவிர்க்க முடியவில்லை. இவையெல்லாம் ஒரு பாடமாக நான் எடுத்து கொண்டுள்ளேன்.

அடுத்தமுறை இதையெல்லாம் சரி செய்வேன். இப்போது அந்த முத்தக்காட்சி, தம்பி ராமைய்யாவாக நான் இரண்டாவது முறை மாறுவேஷம் போடும் அந்த பாதிரியார் காட்சி உள்ளிட்ட 12 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளோம். வரும் வௌ்ளி முதல்(பிப். 6ம் தேதி) இந்த காட்சிகள் படத்தில் இருக்காது.

இசையை இனி எல்லோரும் குடும்பத்தோடு ரசிக்கலாம். இசையை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளேன். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன். 


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions