இசை இன்னும் ஒலிக்காததற்கு காரணம்

Bookmark and Share

இசை இன்னும் ஒலிக்காததற்கு காரணம்

கோடம்பாக்கம் சினிமாவில் குறிப்பிடக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பிறகு திரைக்கு வரும்.

அந்த வகையில் தானே இசையமைத்து நடித்து இயக்கி உள்ள படம் இசை. இப்படம் 30.01.2015 அன்று திரைக்கு வர ரெடியாக இருந்தது. படத்துக்கான விளம்பரங்களும் படு விமரிசையாக செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் வழக்கம் போல இசை படத்துக்கும் சிக்கல் வந்து படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இதனால் அப்செட்டாகி இருப்பது சூர்யா தரப்பு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்களும் தான் என்ன பிரச்சனை என்றால், கியூப் முறையில் படம் உருவாகி உள்ளது.

அதனால் கியூப்க்கு கட்ட வேண்டிய ரூ.5 லட்சம் பணத்தை சூர்யா தரப்பு தரவில்லையாம். இதனால் கியூப்காரார்கள் பணத்தை கட்டிவிட்டு படத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கறாராக கூறிவிட்டனர்.

இதனால் இசை திரைக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்செய்தி கேட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள். 


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா - கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!!
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
அஜித் போல அதிரடியாக இறங்கிய களத்தில் பிரபல நடிகர்!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions