உடம்பை ஸ்லிம் பண்ணிய இஷாரா நாயர்!

Bookmark and Share

உடம்பை ஸ்லிம் பண்ணிய இஷாரா நாயர்!

வெண்மேகம், சதுரங்க வேட்டை, பப்பாளி ஆகிய படங்களில் நடித்தவர் இஷாரா நாயர். இதில் சதுரங்க வேட்டை பெரிய அளவில் ஹிட் ஆனதால், அதையடுத்து கோடம்பாக்கத்தில் அவர் முன்னணி ஹீரோயினி ஆகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.  

ஆனால், இஷாரா வாய்ப்புக்கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் அவரது உடம்பு பொதபொதவென்று பெருத்துப்போய் இருந்ததை காரணம் காட்டி கைவிரித்து விட்டனர். அதனால், சென்னையை காலி பண்ணி விட்டு ஐதராபாத்துக்கு முகாமை மாற்றினார் இஷாரா நாயர்.

அங்கு சில மாதங்களாக இருந்தபடி கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லையாம். அதனால் மீண்டும் தற்போது கோலிவுட்டுக்கே தனது முகாமை மாற்றியுள்ள இஷாரா நாயர், டைரக்டர்களின் அறிவுரையை முன்பு காது கொடுத்தே கேட்காதவர் இப்போது அவர்கள் சொன்னதுபோல் தனது உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி விட்டார்.

கடந்த ஒரு மாதமாக கடும் டயட்ஸ் கடை பிடித்து ஜிம்மே கதியென்று கிடக்கும் நடிகை, சென்னை சாலிகிராமத்தில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகில் உள்ள சாலையில், தினமும் ஈவினிங் வேளைகளில் வாக்கிங்கும் செல்கிறார்.

அப்போது அங்கு கூடியிருக்கும் சினிமாக்காரர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, தனது முகத்தை துணியால் முற்றிலுமாக மறைத்துக்கொண்டு நடக்கும் இஷாரா நாயர், முன்பை விட கணிசமான அளவு எடை குறைந்து ஒரளவு ஸ்லிம்மாகவும் காட்சி தருகிறார் நடிகை.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions